மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:45 AM IST (Updated: 11 Nov 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். தலைவர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். அப்போது கடந்த மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும். பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story