அக்னி அபிஷேக பூஜை
வத்தலக்குண்டு அய்யப்பன் கோவிலில் நடந்த அக்னி அபிஷேக பூஜையில் தீக்கங்குகளை கையில் எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
திண்டுக்கல்
வத்தலக்குண்டு ஸ்ரீகலியுக வரதன் அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜையையொட்டி தினமும் பஜனை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வருகிற 31-ந்தேதி பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் படிகளுக்கு அக்னி அபிஷேக பூஜை நடந்தது. இதற்காக குண்டத்தில் இருந்து தீக்கங்குகளை குருசாமி முருகன் தனது கையில் எடுத்து படிகளுக்கு அபிஷேகம் செய்தார். அப்போது பக்தர்கள் பரவசத்தில் சரண கோஷமிட்டனர். நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story