திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா


திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா
x

மருதாடு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடந்தது.

முன்னதாக மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. இதையடுத்து திரவுபதி அம்மனுக்கு பால், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.

பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அர்ஜுனன், திரவுபதி அம்மனை வைத்து மேளதாளங்களுடன் கிராமத்தின் முக்கிய வீதிகளில் உலா நடந்தது.

இதில் வந்தவாசியை சுற்றியுள்ள புன்னை, ஓசூர், கடைசிகுளம், பிருதூர், கொடுங்காலூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story