வேளாண் கருவிகளை வாடகைக்கு எடுக்க வசதி
வேளாண் கருவிகளை வாடகைக்கு எடுக்க வசதி
திருப்பூர்
வேளாண் பொறியியல் துறை மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உழவு பணிகள், அறுவடைப்பணிகள், நிலம் சமப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ள குறைந்தவாடகையில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கப்படுகிறது.
டிராக்டர் உழவுக்கருவியுடன் 1 மணி நேரத்துக்கு ரூ.500, மண் மள்ளும் எந்திரம் 1 மணி நேரத்துக்கு ரூ.1,230, சக்கரவகை மண் அள்ளும் எந்திரம் 1 மணி நேரத்துக்கு ரூ.890 என வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்துடன் இயக்கக்கூடிய தேங்காய் பறிக்கும் எந்திரம் 1 மணி நேரத்துக்கு ரூ.450 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு தேவைப்படுவோர் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
----