திருப்பூர் மாவட்டத்தில் உரக்கடைகளில் வேளாண்மை இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உரக்கடைகளில் வேளாண்மை இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
x

திருப்பூர் மாவட்டத்தில் உரக்கடைகளில் வேளாண்மை இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் உரக்கடைகளில் வேளாண்மை இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

உரங்கள் இருப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆயிரம் எக்டரில் நெல், 57 ஆயிரம் எக்டரில் தானியங்கள், 20 ஆயிரம் எக்டரில் பயறு வகைகள், 10 ஆயிரம் எக்டரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை நிலைப்பயிராக உள்ளது. வடகிழக்கு பருவ மழையையொட்டி ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. முக்கியமாக நெல் மற்றும் மக்காச்சோளம் பயிர்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பயிரிடப்படுகிறது.

இதைத்தொடர்ந்து உரங்கள் தேவையை பூர்த்தி செய்வதற்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 619 டன் யூரியா திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் 2 ஆயித்து 525 டன் யூரியா உரமும், 1,322 டன் டி.ஏ.பி. உரமும், 1,235 டன் பொட்டாஷ் உரமும், 4 ஆயிரத்து 390 டன் காம்ப்ளக்ஸ் உரமும், 528 டன் சூப்பர் பாஸ்பேட் உரமும் போதிய அளவில் இருப்பில் உள்ளது. அரசு சார்பில் அவினாசி வட்டாரத்தில் உயிர் உர உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலமாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

இணை இயக்குனர் ஆய்வு

இந்தநிலையில் உரங்கள் விவசாயிகளுக்கு போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சரியான விலைக்கு விற்கப்படுவதை கண்காணிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி நேற்று மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உரங்களை விற்பனை முனை எந்திரம் (பாயிண்ட் ஆப் சேல்) மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விற்பனை விலைக்கு உட்பட்டு வினியோகம் செய்ய வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு அவர்கள் விரும்பும் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். வற்புறுத்தி கூடுதலாக எந்த உரத்தையும் விற்பனை செய்ய கூடாது. உர விற்பனையாளர்கள் கடை அறிவிப்பு பலகையில் உர இருப்பு விவரங்களை பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும். நிறுவனங்கள் வாரியாக உர விலைப்பட்டியலை வைக்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.

கடும் நடவடிக்கை

உரக்கட்டுப்பாடு விதிகளை மீறி விற்பனை செய்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். ஆதார் எண் மூலமாக விவசாயிகள் உரங்களை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

---

2 காலம்

உரக்கடையில் வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.

Next Story