பீஞ்சமந்தை கிராமத்துக்கு ரூ.6½ கோடியில் புதிய சாலை அமைக்க ஒப்பந்தம்


பீஞ்சமந்தை கிராமத்துக்கு ரூ.6½ கோடியில் புதிய சாலை அமைக்க ஒப்பந்தம்
x

பீஞ்சமந்தை கிராமத்துக்கு ரூ.6½ கோடியில் புதிய சாலை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ அலுவலகம் மூலம் அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை மலைக்கிராமத்தில் தையல் பயிற்சி முடித்த 23 பெண்களுக்கு தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் தையல் எந்திரம் மற்றும் ஆடைகள் தயாரிக்க 50 சதவீத மானியத்துடன் தலா ரூ.1 லட்சம் வீதம் கடனுதவி வழங்கப்பட்டது.

இதனை மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர். மேலும் குடியாத்தத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு 30 சதவீத மானியத்துடன் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசுகையில், பீஞ்சமந்தை கிராமத்துக்கு புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.6 கோடியே 68 லட்சத்துக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார் என்றார்.

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாவட்ட தாட்கோ மேலாளர் பிரேமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story