சம்பா சாகுபடியில் அதிக மகசூல் பெற உதவும் வழிமுறைகள் - வேளாண்மை உதவி இயக்குனர்
சம்பா சாகுபடியில் அதிக மகசூல் பெற உதவும் வழிமுறைகள் குறித்து பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி விளக்கம் அளித்துள்ளார்.
சம்பா சாகுபடியில் அதிக மகசூல் பெற உதவும் வழிமுறைகள் குறித்து பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மாலதி வெளியிட்டுள்ள செய்திப்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சம்பா நெல் ரகம்
ஏ.டி.டி. 51 நெல் ரகமானது விவசாயிகள் மத்தியில் அதிகமாக பயிரிடக்கூடிய சம்பா நெல் ரகமாகும். வேளாண் விரிவாக்க மையம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களின் மூலம் ஏ.டி.டி. 51 நெல் ரகமானது வினியோகம் செய்யப்பட்டு விவசாயிகளால் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ரகமானது அதிக விளைச்சல் தரக்கூடிய ஒன்றாகும். ஆனால் உயரமாக வளரக்கூடிய ஒன்றாக உள்ளதால் அறுவடை காலங்களில் சாயும் தன்மை பெற்றதாக உள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட அளவு
இந்த தன்மையை நிவர்த்தி செய்ய தழைச்சத்து உரத்தை நான்கு சம பாகங்களாக பிரித்து அளிக்க வேண்டும். தழைச்சத்து நிறைந்த யூரியாவினை ஒரு ஏக்கருக்கு 130 கிலோ என்ற அளவில் கடைசி உழவின் போதும், தூர் கட்டும் பருவத்தின் போதும், கதிர் உருவாகும் பருவத்திலும் மற்றும் கதிர் வெளிவரும் தருணங்களிலும் சம பாகங்களாக பிரித்து இட வேண்டும்.
தூர் கட்டும்பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்கள் மிகவும் முக்கியமான பயிர் வளர்ச்சியில் காலங்களாகும். இந்த தருணத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவு முறை குறையாமல் உரம் இடப்படுதல் மிக முக்கியமான ஒன்றாகும்.
உர மேலாண்மை
தழைச்சத்து உரம் அதிகமாக இடும்போது வளர்ச்சியானது அதிகரித்து பயிரானது உயரமாக காணப்படும். எனவே இலைவண்ண அட்டையை பயன்படுத்தி தழைச்சத்து உரத்தினை பயிர்களுக்கு உரிய அளவில் இடுதல் வேண்டும்.
மணிச்சத்து தரக்கூடிய சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்டினை அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 125 கிலோ என்ற அளவில் இட வேண்டும். சாம்பல் சத்து நிறைந்த மூரியேட் ஆப் பொட்டாஷ் உரத்தினை ஒரு ஏக்கருக்கு இரு முறை 17 கிலோ என்ற அளவில் பூக்கும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்களில் இட வேண்டும். இவ்வாறு சரியான உர மேலாண்மை மேற்கொண்டு கூடுதல் மகசூல் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.