தரிசு வயல்களில் உளிக்கலப்பையின் பயன்பாடு


தரிசு வயல்களில் உளிக்கலப்பையின் பயன்பாடு
x
தினத்தந்தி 6 May 2023 12:45 AM IST (Updated: 6 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தரிசு வயல்களில் உளிக்கலப்பையின் பயன்பாடு குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

திருவாரூர்

தரிசு வயல்களில் உளிக்கலப்பையின் பயன்பாடு குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான தொழில் நுட்ப வல்லுனர் கருணாகரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடினமான மண் தட்டு

தொடர்ந்து உழுது விவசாயம் செய்வதினால் வயலில் 60-70 செ.மீ. ஆழத்தில் கடினமான மண் தட்டு உருவாகிறது. இந்த கடின மண் தட்டானது பயிர்களின் ஆணிவேர்கள் வளர்ச்சியை வெகுவாக தடுக்கிறது. இவ்வகை மண் தட்டுக்கள், வண்டல் மண் தட்டு, இரும்பு (அல்லது) அலுமினியம் மண் தட்டு, களிமண் தட்டுக்கள் அல்லது பல ஆண்டுகளாக அதிக எடை உள்ள டிராக்டர்களை கொண்டு வயலை உழுவதினால் உருவான கடினமண் தட்டுக்களாகவும் இருக்கலாம்.

இந்த வகையான கடினமண் தட்டினால் பயிரின் வேர் ஆழமாக வளர்வது தடுக்கப்பட்டு ஒரு சில செ.மீ. ஆழத்தில் வேர்கள் அடர்ந்து பயிர்களின் வளர்ச்சியானது மிகவும் பாதிக்கப்படுகிறது.

உளிக்கலப்பை

பயிரின் வளர்ச்சியை தடுக்கும் மண் தட்டுகளை உடைத்து உழுவதற்கு உளிக்கலப்பை பயன்படுகிறது. கோடை காலத்தில் இதுபோன்ற உளிக்கலப்பையை பயன்படுத்தி உழுவதன் மூலம் பயிருக்கு கூடுதல் வளர்ச்சி கிடைக்கும்.

உளிக்கலப்பையானது 0.5 மீட்டர் இடைவெளியில் குறுகும் நெடுக்குமாக வயலை உழுது கடினமான அடி மண்ணை உடைத்து ஆழமாக (60-70 செ.மீ.) உழுவதற்கு பயன்படுகிறது.

டிராக்டர்கள் உதவியுடன்...

இந்த உளிக்கலப்பை மற்ற உழவு கருவிகள் போன்று அல்லாமல் நிலத்தின் அடியில் உள்ள கடினத்தன்மையை மட்டும் தளர்த்தி நிலத்தின் நீர் உட்புகும் திறனை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஆணிவேர்கள் கொண்ட பயிர்களின் வேர் வளர்சியையும் ஊக்கப்படுத்தும். அடிமண் உழவு கடின மண்ணை உடைக்கும்போது குறுகிய வெட்டுக்கள் மேற்பரப்பு மண்ணில் உண்டாகிறது.

இந்த உளிகலப்பையை அதிக இழுவிசை திறன் கொண்ட டிராக்டர்கள் உதவியுடன் மட்டுமே பயன்படுத்த இயலும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story