கரும்பு நடவு செய்த வேளாண்மை கல்லூரி மாணவிகள்
ராயகிரி வயல் பகுதியில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கரும்பு நடவு செய்தனர்.
தென்காசி
சிவகிரி:
வல்லநாடு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் முகாமிட்டுள்ளனர். கல்லூரி முதல்வர் தேரடிமணி தலைமையில், பேராசிரியர்கள் தாமோதரன், செந்தில்நாதன், இணை பேராசிரியர்கள் சபரிநாதன், சுப்புலட்சுமி, வட்டார இணை வேளாண் இயக்குனர் இளஞ்செழியன், வேளாண் இயக்குனர் கவுசல்யா ஆகியோரின் ஆலோசனையின்படி உதவி வேளாண் அலுவலர் அரவிந்த் முன்னிலையில் ராயகிரி கிராமத்தில் பிச்சைமுத்து என்பவரின் கரும்பு தோட்டத்தில் மாணவிகள் ஜெயந்தி, கல்பனா, ஹரிணிஸ்ரீ, திவ்யா, தீபிகா, ஹரிப்பிரியா, ஐஸ்வர்யா, கனிஷ்கா ஆகியோர் 75 நாட்கள் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூரில் தங்கி செயல்பட உள்ளனர். இவர்கள் ஒன்றாக இணைந்து கரும்பு நடவு செய்தனர்.
Related Tags :
Next Story