வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
ரெட்டியார்சத்திரம் அருகே வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
திண்டுக்கல்
ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பழக்கனூத்து ஊராட்சியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்துறை விளக்க சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் செம்பட்டியில் உள்ள தனியார் தோட்டக்கலை கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிற மாணவிகள் தீபிகா, தீபா, தேவ தாரணி, தர்ஷினி ஸ்ரீ, திவ்யபாரதி, ஹேமஸ்ரீலேகா உள்ளிட்ட மாணவிகள் கலந்து கொண்டு கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை பணி குறித்து தங்களது அனுபவத்தை எடுத்துரைத்தனர். மேலும் வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story