விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள்
கடவாசல், எருக்கூர் பகுதிகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே கடவாசல், எருக்கூர் ஆகிய துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் ஹரிப்ரியா வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பாத்தி, முத்தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னை மரக்கன்றுகள், பண்ணை கருவிகள் உள்ளிட்ட வேளாண் உபகரணங்களை வழங்கி பேசினார். இதில் வேளாண் உதவி அலுவலர்கள் கார்த்தி, பாலச்சந்திரன், ரஞ்சிதா மகேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story