ஜெயங்கொண்டான்கிராம மக்களுக்கு வேளாண் உபகரணங்கள்ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்
ஜெயங்கொண்டான் கிராம மக்களுக்கு வேளாண் உபகரணங்களை ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்.
செஞ்சி,
செஞ்சி ஒன்றியம் ஜெயங்கொண்டான் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உதவி வேளாண்மை அலுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இதில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் 300 பேருக்கு தென்னங் கன்றுகள், 200 பேருக்கு மாடித்தோட்டம் அமைப்பதற்கான காய்கறி விதைகள் ஆகியவற்றை வழங்கினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், துணை வேளாண்மை அலுவலர் பிரியங்கா, ஊராட்சி துணை தலைவர் தேசிங்கு, அட்மா குழு தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, இளைஞரணி அமைப்பாளர் ஜம்போதி பழனி, துணை அமைப்பாளர் பீரங்கிமேடு பழனி, கிளை செயலாளர்கள் மேனகா, சரவணகுமார், பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.