வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்


வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்
x

சேந்தங்குடியில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை பூண்டி கே.கலைவாணன் திறந்து வைத்தார்.

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் ஒன்றியம் சேந்தங்குடி கிராமத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன்ரூ.38 இலட்சம் மதிப்பில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. செருவாமணி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியுதவியுடன் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம் கட்டிடமும், திருநெல்லிக்காவல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியுதவியுடன் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மைய கட்டிடமும் கட்டப்பட்டன. இந்த 3 அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. விழாவில் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனாமணி, கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால ஞானவேல், கோட்டூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ப.அபிநயா, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரியம்மாள் பாக்யராஜ் (திருநெல்லிக்காவல், செருவை கார்த்திக் (செருவாமணி), மகேஸ்வரி சற்குணம் (சேந்தங்குடி) ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story