வேளாண்மை தகவல்களை விவசாயிகள் பெறலாம்
சமூக ஊடகத்தில் இணைந்து வேளாண்மை தகவல்களை விவசாயிகள் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி Youtube - https://www.youtube.com/agridepttn, Facebook - https://www.facebook.com/tnafwd, Twitter - https://twitter.com/agridept-tn ஆகிய சமூக ஊடக இணைப்பில் இணைந்து விவசாயம் தொடர்பாக தங்களுக்கு தேவைப்படும் விவரங்களை விரைவாகப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story