வேளாண் மை நோக்கம்- மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை நோக்கம்-மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை நோக்கம்-மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் மண், வண்டல் மண்மற்றும் களிமண் போன்ற சிறு கனிமங்களை தூர்வாரி கட்டணமில்லாமல் பொது மக்கள் வேளாண்மை நோக்கம்- மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களுடன் தொடர்புடை ய வேளாண்மை அலுவலர்கள் சான்று, மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம்
சான்றுடன், கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பம் பெ ற்று விண்ணப்பிக்க வேண்டும்.
களிமண் இலவசமாக
விவசாய பயன்பாட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலத்திற்கு 75 கனமீட்டர் மற்றும் 1 ஏக்கர் பரப்பளவுள்ள புஞ்சை நிலத்திற்கு 90 கனமீட்டர் வண்டல் மண் - மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செய்வதற்கு 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்துக்கொள்ள உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும். இதுகுறித்து மேல்விவரங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொ டர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.