விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள்


விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள்
x

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டன

மயிலாடுதுறை

கொள்ளிடம் ஒன்றியத்தில் கடவாசல், எருக்கூர் ஊராட்சி பகுதியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பாத்தி பன்னீர்செல்வம், முத்தமிழ்செல்வி சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் வேளாண் இடுபொருட்களை வழங்கினார். இதில் சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்ல சேது ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


Next Story