விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருள்கள்
விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருள்கள்
வாடிப்பட்டி
வாடிப்பட்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தேசிய வேளாண்வளர்ச்சி திட்டம் ஒருங்கிணைந்த பண்னைய திட்டத்தின் கீழ் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் சிவா அமுதன் முன்னிலை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் வாசுகி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருட்கள் வழங்கினார். இதில் சி.புதூர், கட்டக்குளம், மன்னாடிமங்கலத்தைச் சேர்ந்த 30 விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு நெல்விதை 40 கிலோ, நெல் நுண்ணூட்டம் 12.5 கிலோ, உயிர் உரங்கள் சூடோமோனஸ் 2.5 கிலோ உள்பட பல்வேறு இடுபொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை அலுவலர் டார்வின், துணை அலுவலர் மனோகரன், உதவி விதை அலுவலர் முத்துப்பாண்டி, உதவி அலுவலர்கள் தங்கையா, சரவணகுமார், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் பூமிநாதன், அருணா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.