50 சதவீத மானியத்தில் வேளாண்மை கருவிகள்
சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண்மை கருவிகள் வழங்கப்படும் என வேளாண்மை அதிகாரி கூறியுள்ளார்.
தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பட்டுக்கோட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் கதிர் அரிவாள்- 2, கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்து, உரம் தெளிக்க அல்லது விதை தெளிக்க பயன்படும் அலுமினிய கலன் ஆகியவை அடங்கிய வேளாண்மை கருவிகள் தொகுப்பு சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story