விவசாய நில உரிமையாளர்கள் சங்க கூட்டம்
பனங்குடியில் விவசாய நில உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் பனங்குடி வீரகாளியம்மன் கோவில் வளாகத்தில் சி.பி.சி.எல். நிறுவனத்தால் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நல சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகேசன் வரவேற்றார்.சி.பி.சி.எல். நிறுவனம் நில கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு அரசாணை எண்.72-ல் பிறப்பித்துள்ள தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகப்படுத்துவதையும், பத்திரப்பதிவு செய்து தருமாறு நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்துவதையும், நில உரிமையாளர்கள் நிராகரிப்பது எனவும், தமிழக அரசு இந்த அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இதில் போராட்டக்குழு தலைவர் விஜயராஜ், சங்க நிர்வாகிகள், நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.