வேளாண்மை உற்பத்தி பொருட்கள் கண்காட்சி


வேளாண்மை உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
x
தினத்தந்தி 21 Feb 2023 7:00 PM GMT (Updated: 21 Feb 2023 7:00 PM GMT)

கடையநல்லூரில் வேளாண்மை உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றியம் ஊர் மேலழகியான் ஆர்.வி.எஸ். வேளாண் அறிவியல் மையத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடந்தது. கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.

வேளாண்மை துணை இயக்குனர் உதயகுமார் வரவேற்றார். இணை இயக்குனர் தமிழ்மலர், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, வேளாண் துணை இயக்குனர் கிருஷ்ணகுமார் ஆகியோர் திட்ட விளக்க உரையாற்றினர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழு தலைவர் சுப்பம்மாள், துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பயிர்களின் பாரம்பரிய ரகங்கள், பழங்கால வேளாண் கருவிகள், வேளாண் விளைபொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. முடிவில், வேளாண்மை துணை இயக்குனர் கனகம்மாள் நன்றி கூறினார்.


Next Story