வேளாண் விளைபொருட்கள் விற்பனை நிலையம்


வேளாண் விளைபொருட்கள்  விற்பனை நிலையம்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் வேளாண் விளைபொருட்கள் விற்பனை நிலையத்தை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில், குருவிகுளம், மானூர், மேலநீலிதநல்லூர் வட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக தொடங்கப்பட்ட நமக்கு நாம் கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் விவசாயிகளின் மதிப்புக் கூட்டப்பட்ட விளைபொருட்களை விற்பனை நிலையம் சங்கரன்கோவில் தேரடி திடல் அருகே தொடங்கப்பட்டது. இதனை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வேளாண் விற்பனை துணை இயக்குனர் கிருஷ்ணகுமார், உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் முனியாண்டி, நமக்கு நாம் கூட்டு பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் நிர்வாக இயக்குனர்கள் பொன் முத்துராமலிங்கம், கந்தசாமி, ராமமூர்த்தி, ஆனந்த், ராமசுப்பு, பழனிச்சாமி, சின்ன பேச்சிமுத்து, ஆண்டாள் ராணி, வேளாண்மை அலுவலர் முத்துக்குமார், உதவி வேளாண்மை அலுவலர் மரகதவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story