வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை கூட்டம்
தலைஞாயிறில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை கூட்டம்
நாகப்பட்டினம்
வாய்மேடு:
நாகை மாவட்டம் தலைஞாயிறு வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார் தலைமை தாங்கினார். உதவி வேளாண் இயக்குனர் கருப்பையா முன்னிலை வகித்தார். இதில் வேளாண் தொழில்நுட்பம் குறித்து சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தை சேர்ந்த கண்ணன் விளக்கி பேசினார். புதிய தொழில்நுட்பம் குறித்து வேளாண் அலுவலர் நவீன் பேசினார். இதில் உதவி வேளாண் அலுவலர்கள், ஆத்மா குழு உறுப்பினர்கள், உழவர் நல குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story