வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம்
ஆவரைகுளத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் நடந்தது.
வடக்கன்குளம்:
வள்ளியூர் வட்டாரம் சார்பில் ஆவரைகுளத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் நடந்தது. வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார். வள்ளியூர் வட்டார வேளாண்மை துணை இயக்குனர் சுனில் தத் கலந்து கொண்டு வேளாண் தொழில்நுட்பத்தில் சோலார் பயன்பாடுகள் மற்றும் மண்வள மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். நெல்லை மாவட்ட வேளாண்மை அலுவலர் ஞானதீபா, உழவன் செயலி பயன்பாடு மற்றும் பதிவிறக்கம் செய்தல் குறித்து எடுத்துரைத்தார். வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா வாழ்த்துரை வழங்கினார்.
முகாமில் சேரன்மாதேவி உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணன், கலந்துகொண்டு வேளாண் பொறியியல் துறை சார்ந்த திட்டங்களான வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டம் குறித்து எடுத்துரைத்தார். ஆவரைகுளம் பஞ்சாயத்து தலைவர் அழகு பாஸ்கர் வாழ்த்துரை வழங்கினார். உதவி பொறியாளர் நடராஜன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் திரிசூலம், உதவி வேளாண் அலுவலர் மாரி செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.