விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கம்பம், கடமலைக்குண்டுவில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கம்பத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைச் செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். கம்பம் பகுதி பொருளாளர் லட்சுமி, பகுதி குழு உறுப்பினர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை வேறு எந்த பணிக்கும் பயன்படுத்த கூடாது.
வீடு இல்லாத பொதுமக்களுக்கு இலவசமாக வீடு வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கான அடையாள அடை வைத்துள்ள அனைவரும் வேலை வழங்க வேண்டும். அரசு அறிவித்த தினக்கூலியான ரூ.294-யை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மயிலாடும்பாறையில் ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ் தலைமைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சங்கத்தினர் கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர் இளங்கோவனிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.