விவசாய தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்
விவசாய தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்
டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் கே. ராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பேசினர். விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 200 பேர் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஞானமோகன், மாவட்ட துணை செயலாளர் எம். நாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.