விவசாய தொழிலாளர்கள் சங்க கூட்டம்
விவசாய தொழிலாளர்கள் சங்க கூட்டம்
நாகையில் விவசாய தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
100 நாள் வேலை திட்டத்தில் சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததை திரும்ப பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும். தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கு வரும் நேரத்தை காலை 9 மணி ஆக மாற்ற வேண்டும். ஆன்லைன் வருகை பதிவேடு முறையை ரத்து செய்ய வேண்டும். ஆதார் இணைப்பு அடிப்படையில் ஊதிய வழங்குவதை கைவிட வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடக்கும் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் நாகை மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.