பாய் நாற்றங்காலை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு


பாய் நாற்றங்காலை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
x

சீர்காழி வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கான பாய் நாற்றங்காலை வேளாண்மை இணை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி, மே. 31-

சீர்காழி வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கான பாய் நாற்றங்காலை வேளாண்மை இணை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாய் நாற்றங்கால் ஆய்வு

சீர்காழி வட்டாரம் அகனி கிராமத்தில் நெல் நேரடி விதைப்பு பணி மற்றும் பாய் நாற்றங்காலை மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குனர் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அகனி தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் கடன் சங்கத்தில் உர இருப்பு மற்றும் பி.ஓ.எஸ் .எந்திர இருப்பு சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார்.தொடர்ந்து காத்திருப்பு கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்த வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது சீர்காழி வட்டாரத்தில் இதுவரை 6,300 ஏக்கரில் நடவு செய்வதற்கான நாற்றங்கால் தயாராக உள்ளது என்றும், மீதம் உள்ள பரப்புகளில் குறைந்த செலவில் நெல் சாகுபடி செய்ய நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளுமாறும் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

உரம் , விதை இருப்பு உள்ளதா

உரம் மற்றும் விதை தேவையான அளவிற்கு இருப்பு உள்ளதா? என வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆய்வு செய்தார் .இந்த ஆய்வின் போது சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் ,விதை உதவி அலுவலர்கள் அசோகன், பரஞ்சோதி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் தமிழரசன், விஜய் அமிர்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story