வேளாண்மை கருவிகள் கண்காட்சி


வேளாண்மை கருவிகள் கண்காட்சி
x
திருப்பூர்


உடுமலையில் வேளாண்மை கருவிகள் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) வரை நடக்கிறது.

கண்காட்சி

உடுமலை தளிரோடு தேஜஸ் மகாலில் ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் வேளாண்மை கருவிகள் கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை எஸ்.எம்.டிராவல்ஸ் நாகராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

வேளாண்மை பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் வி.கே.விஸ்வநாதன், உதவி பொறியாளர்கள் முத்துராமலிங்கம், யுவராஜ், தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேளாண் கருவிகள்

இந்த கண்காட்சியில் வேளாண்மை கருவிகள், மருந்து தெளிக்கும் கருவிகள், தேங்காய்பறிக்கும் கருவி, டிராக்டர், பவர் டிரில்லர், தென்னை மட்டையை தூளாக்கும் கருவி, நர்சரி பண்ணை, கால்நடை சம்பந்தமான கருவிகள் உள்பட பல்வேறு ஸ்டால்கள் இடம் பெற்றன.

இந்த கண்காட்சியில் உடுமலை மற்றும் அருகில் உள்ள ஊர்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லியப்பன் செய்திருந்தார். வேளாண்மை கண்காட்சி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.


Next Story