விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு
x
திருப்பூர்

மடத்துக்குளம்

மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

 மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் கிராமப்புற வேலை உறுதித்திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. கடந்த நிதி ஆண்டிலும் பெரும்பாலானோருக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் செய்யப்படவில்லை. இதனால் இதை நம்பி வாழும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். விவசாய வேலையும் இல்லாததால் தினசரி வருவாய் இன்றி தவிக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு உரிய வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story