அடுத்த மாதம் 19-ந்தேதி ரெயில் இயக்கப்படுவதை முன்னிட்டுபுதுப்பொலிவுடன் தயாராகும் போடி ரெயில் நிலையம்


அடுத்த மாதம் 19-ந்தேதி ரெயில் இயக்கப்படுவதை முன்னிட்டுபுதுப்பொலிவுடன் தயாராகும் போடி ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:40+05:30)

அடுத்த மாதம் 19-ந்தேதி ரெயில் இயக்கப்படுவதை முன்னிட்டு போடி ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.

தேனி

மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டத்தில் மதுரை-தேனி இடையே பணிகள் நிறைவு பெற்று ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி-போடி இடையே ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்று அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இதற்காக போடி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி நடைமேம்பாலம் அமைத்தல், நடைமேடை மேற்கூரை அமைத்தல், நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், சுற்றுச்சுவர் கட்டுதல், கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் போடி ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. இதனை பொதுமக்கள் பார்த்து செல்வதுடன், தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.


Related Tags :
Next Story