திருமண உதவி திட்டத்தில் 26 பேருக்கு 208 கிராம் தங்கம், ரூ.1¼ கோடி நிதி
நாகையில் திருமண உதவி திட்டத்தில் 26 பேருக்கு 208 கிராம் தங்கம் மற்றும் ரூ.1¼ கோடி நிதி வழங்கப்பட்டது.
நாகையில் திருமண உதவி திட்டத்தில் 26 பேருக்கு 208 கிராம் தங்கம் மற்றும் ரூ.1¼ கோடி நிதி வழங்கப்பட்டது.
தாலிக்கு தங்கம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ., மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் 22 பேர், கலப்பு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 4 பேர் என மொத்தம் 26 பேருக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 208 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பிலான நிதி உதவியை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
விவசாயிகளுக்கு உதவி
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் மானியத்தில் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் காய்கறி விற்பனை செய்வதற்கான வண்டியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலஅலுவலர் அன்பரசி, நகரசபை தலைவர் மாரிமுத்து, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முகமது சாதிக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.