எய்ட்ஸ் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி


எய்ட்ஸ் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.

நீலகிரி

ஊட்டி,

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்து பார்வையிட்டார். டிசம்பர் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.

கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாடகங்கள் மூலம் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். நேற்று முதல் வருகிற 23-ந் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் பால்வினை நோய் குறித்து தெரிந்துகொள்ளவும், எச்.ஐ.வி. குறித்த பயம் விலகிடவும், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்குதல், புறகணித்தல் போன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மாவட்ட திட்ட மேலாளர் அறிவழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story