எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்
திண்டுக்கல்லில், எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி, உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார். இதையடுத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் தலைமை தபால் அலுவலகம், பஸ் நிலையம் உள்பட முக்கிய பகுதிகள் வழியாக வலம் வந்தது. இதில் செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். அப்போது எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் ஏந்தி சென்றனர்.
அப்போது எய்ட்ஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன், துணை இயக்குனர் ராமச்சந்திரன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.