எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்


எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
x

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூரில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அமல்தாஸ் வரவேற்று பேசினார். தேசிய சங்கத்தின் சேர்மன் கமிட்டி உறுப்பினர் ஜெயஜோதி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் அமல்படுத்தி வரும் அப்ரைசல் முறையின் தீமைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரியும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், இதுகுறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story