நாமக்கல்லில்எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தனியார் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழகத்தில் 180 எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாரபட்சம் இன்றி 10 சதவீத ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story