விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்
விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றம்
நெல்ைல மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் சிவந்தியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 18-ந் தேதி ஐப்பசி விசு திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று விக்கிரமசிங்கபுரம் வழியடிமைகொண்ட நாயகி சமேத சிவந்தியப்பர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு அங்குரார்ப்பணம், ரக்சாபந்தனம் நடைபெற்றது.
திருவீதி உலா
தொடர்ந்து தினமும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் ஏக சிம்மாசனத்தில் அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பூப்பல்லக்கு எழுந்தருளுதல், தீர்த்தவாரியும், இரவில் சுவாமி, அம்பாள் வீதி உலாவும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான ஐப்பசி விசு தினத்தன்று பாபநாசத்தில் விசு தீர்த்தவாரி நடைபெறும்.
நேற்று நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.