பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை


பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை நேற்று நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகமும், தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜையும் நடந்தது. மாலை 5 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா ஐப்பசி மாதம் பௌர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். மாலை 6.30 மணியளவில் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர் நறுமண பொருட்கள் உள்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்று காளி, நாகக்காளி சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன் பேச்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story