காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருச்சி

ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருச்சி மாநகராட்சி, பள்ளி கல்வித்துறை மற்றும் திருச்சி கல்வி மாவட்ட நிர்வாகமும் இணைந்து காற்று மாசு குறைத்தல் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தை ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் விஜேந்திரன், தலைமை ஆசிரியர் மீனாலோட்சனி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலம் பள்ளியில் இருந்து புறப்பட்டு ராஜகோபுரம் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதில் 350-க்கு மேற்பட்ட மாணவர்களும் 50-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


Next Story