பறவை மோதியதால் பழுதான விமானம்


பறவை மோதியதால் பழுதான விமானம்
x
திருச்சி

திருச்சியில் பறவை மோதியதால் விமானம் பழுதானது.

ஏர் ஏசியா விமானம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு ஏர் ஏசியா விமானம் சம்பவத்தன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 176 பயணிகள் அமர்ந்து இருந்தனர். அப்போது, விமானத்தின் முன் பகுதியில் உள்ள எந்திர இறக்கையில் பறவை மோதியது. இதனால் இறக்கையில் பழுது ஏற்பட்டது.

இதனை சரி செய்ய 2 மணி நேரம் ஆகும் என கூறி விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

பின்னர் அவர்கள் விமான நிலைய முனைய பகுதியில் அமரவைக்கப்பட்டனர். சுமார் 4 மணி நேரம் வரை விமானநிலைய முனையத்தில் தங்கி இருந்தும் பழுது சரி செய்யப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மாற்று விமானம்

விமானம் தாமதம் காரணமாக பயணிகளுக்கு உணவு, குடிநீர் என எதுவும் வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தும் நீண்ட நேரம் ஆகியும் விமானத்தில் ஏற்பட்ட பழுது சீர்செய்யப்படவில்லை. இதனையடுத்து பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story