ஏ.ஐ.டி.யு.சி.கட்டிட தொழிலாளர் சங்க 6-வது மாவட்ட மாநாடு
பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி.யை சேர்ந்த பழனிச்சாமி, முருகேசன், சிவகுமார், வெள்ளியங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் மூர்த்தி வரவேற்றார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த மாநாட்டில், ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தைச் சேர்ந்த சி.பழனிச்சாமி, என்.சேகர், எஸ்.சாகுல் அமீது, ஆர்.கணேசன், ரவிக்குமார், மற்றும் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் ஓய்வூதியம் பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதிலும், ஆண் தொழிலாளர்களுக்கு 55 வயதிலும், மாதம் ரூ.1000 வழங்குவதை, ரூ.6 ஆயிரமாக மாக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டிடத்தொழிலாளர்களுக்கு வீடு கட்ட தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.4லட்சத்தை உடனே வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். கட்டிடத் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தின் மூலம் மருத்துவ வசதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.