ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் ஓய்வு பெற்ற நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க தலைவர் முத்தையன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் ஜெயபாலன், ஓம்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் துணைத்தலைவர் மாதேஸ்வரன், மண்டல பொது செயலாளர் குப்புராங்கன், ஓய்வு பெற்றோர் நலச்சங்க மாநில செயலாளர் தங்கவேல், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். 2021 ஏப்ரல் முதல் ஓய்வு, விருப்ப ஓய்வு, இறந்து போன தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
ஊதிய ஒப்பந்த பலன்களை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும். அரசே பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முடிவில் சங்க பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.