ஏ.ஐ.டி.யு.சி.தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யு.சி.தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உடுமலை
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை கடைபிடித்து வருவதைக்கண்டித்தும், தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், மின்கட்டணம், வீட்டுவரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை தாறுமாறாக உயர்த்துவதை கைவிட வேண்டும், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின்மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டும், பல மடங்கு உயர்ந்துள்ளசமையல்எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏ.ஐ.டி.யு.சி.தொழிற்சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில குழு உறுப்பினர் வி.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். உடுமலை வட்டார பொருளாளர் கே.எஸ்.ரணதேவ், துணை செயலாளர் நந்தகோபால், கட்டிட தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் மு.ஆறுமுகம் மற்றும் மகேஸ்வரன், ஏ.செல்வராஜ், எம்.முருகன், ஜெயராஜ், எம்.சுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.