தக்கலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்


தக்கலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்
x

தக்கலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது, போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார், பொதுச்செயலாளர் ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்பட பலர் பேசினர்.

இதில் மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி உயர்வை கண்டித்தும், கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அனிதாமோள், அருள்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story