டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
x

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. சிம்புதேவன் தலைமை தாங்கினார்.

நடைபாதை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் மாணிக்கம், உழைக்கும் பெண்கள் அமைப்பு மாவட்ட செயலாளர் சரோஜா, ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் ஏ.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய குழு உறுப்பினர் எஸ்.ஆர்.தேவதாஸ் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், பழைய, புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீர்படுத்த வேண்டும். ஆமைவேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிவறை அமைத்திட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநகராட்சியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், சந்திரசேகர், பாஸ்கர், சசிக்குமார், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story