ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 April 2023 12:30 AM IST (Updated: 14 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் ஏ.ஐ.டி.யு.சி.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தென்காசி

சிவகிரி:

பெட்ரோல், டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதங்கள் விதிக்கும் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ தொழிலாளர் நலவாரியம் பதிவுகளை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்டோ ஓட்டுனர் தென்காசி மாவட்ட செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பையா, தென்காசி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் இசக்கி துரை, கூட்டுறவு பண்டகசாலையின் தலைவர் ராஜேந்திரன், சிவகிரி பேரூராட்சி கவுன்சிலர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story