ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் பி.வெங்கடேசன் தொடங்கி வைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன், நகர செயலாளர் முருகன், மாவட்ட குழு பைரோஸ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
பா.ஜ.க. எம்.பி. மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்தது குறித்து போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த பிறகும் கைது செய்யாமல் காலம் கடத்தி வருவதை கண்டித்தும், நியாயமான முறையில் போராடிய மல்யுத்த வீராங்கனைகளை கொடூர தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறையை கண்டித்தும் கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story