ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டக்குழு கூட்டம்
ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டக்குழு கூட்டம் தாந்தோணிமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் கலாராணி, மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகளை கண்டிப்பது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இதுபோன்ற நிகழ்ச்சியினை பட்டியலிட்டு தொழிலாளர் மத்தியில் பிரசாரம் செய்வது, உள்ளாட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் துறையில் ஒப்பந்தம் விடும் வகையில் அரசு கொண்டுவரும் சட்டங்களை கைவிட வலியுறுத்துவது, கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் பென்ஷன் வழங்க கேட்டு கொள்வது, சாலையோர வியாபாரிகளுக்கு உரிய அட்டை வழங்கி நிபந்தனையின்றி வங்கி கடன் வழங்க வலியுறுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.