ஊட்டியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
12 மணி நேரம் வேலை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி
ஊட்டி,
தமிழக சட்டசபையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு துணை பொதுச்செயலாளர் நசீர் தலைமை தாங்கினார். மண்டல பொதுச்செயலாளர் சையது இப்ராஹிம் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேர்த்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றியமைத்து தொழிற்சாலை சட்டம் 65 ஏ வை திருத்தி அமைத்து முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர்களின் நலனை பறிக்கின்ற வகையில் சட்டம் இயற்றப்பட்டது கண்டிக்கத்தக்கது என கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் ரவி, மோகணன் ராஜ்குட்னர்ஸ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story