ஏ.ஐ.டி.யூ.சி.யினர் ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யூ.சி.யினர் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சை ரெயிலடியில், ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை ரெயிலடியில், ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சேவையா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டங்களான தொழிலாளர் உரிமை குறித்த சட்டம் உள்ளிட்ட 44 சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக திருத்தம் செய்து 4 சட்ட தொகுப்புகளாக மத்தியஅரசு சுருக்கி உள்ளது. தமிழ்நாட்டில் இந்த சட்டங்களை அமல் படுத்தக்கூடாது. தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை அமல் படுத்த மாட்டோம் என்று சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உயர்ந்துள்ள மின்கட்டண உயர்வு, சொத்துவரி, குடிநீர் வரி உயர்வுகள் கைவிடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மின்வாரிய சம்மேளன துணைத் தலைவர் பொன்.தங்கவேல், நிர்வாகி தண்டபாணி, அரசு போக்குவரத்து சங்க பொருளாளர் ராஜமன்னன், துணைசெயலாளர் செல்வராஜ், ஓய்வு பெற்றோர் சங்க துணைத்தலைவர்கள் சுந்தரபாண்டியன், மாணிக்கம், நுகர்பொருள் வாணிபக்கழக சங்க மாவட்ட பொருளாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story