ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசே கழக பென்சன் திட்டத்தை ஏற்று நடத்திட வேண்டும். 88 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள டி.ஏ. அரியர்சை வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும். வாரிசு பணி நியமனம் கல்வித்தகுதியின் அடிப்படையில் வழங்கிட வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதிய உயர்வுக்கேற்ப ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வழங்கிட வேண்டும். 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த இளம் தொழிலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 2021 ஏப்ரல் 21 முதல் வழங்கப்பட வேண்டிய ஓய்வுகால பணப்பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல தலைவர் பூபதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் பொருளாளர் சக்திவேல், துணைத்தலைவர் ஹரிந்திரன், சம்மேளன நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.